Saturday, December 24, 2011

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


உலகெங்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது கிறிஸ்துமஸ். மனிதர்களை ரட்சிப்பதற்காகத் தேவமைந்தன் ஒரு சுடராக தொழுவத்தில் தோன்றிய நாள். உலகெங்கிலும் இதில் வித்தியாசமே இல்லை. 

ஆனால் கலாசாரத்துக்குக் கலாசாரம், நாட்டுக்கு நாடு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறுசிறு வித்தியாசங்களுடன் கொண்டாடுகிறார்கள். 
ஆனால் அடிப்படை உணர்வு ஒன்றுதான். 

 உலகெங்கும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் “நட்சத்திரங்களும்”, விளக்குகளும் பூத்து ஜொலிக்கும். கிறிஸ்துமஸ் மரங்களில் மினுக்கும் விளக்குகள் காய்த்துச் சிரிக்கும். தேவ புதல்வனை வரவேற்கும் பாடல்கள் ஒலிக்கும். இனிமை பூத்துக் கிடக்கும் இந்தக் குளிர்கால வேளையில் எங்கெங்கும் ஓர் உற்சாகம் மிதக்கும். உச்சக்கட்ட கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின மாலையில்தான். அப்போது மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவைப் போற்றிப் பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று “கேக்” போன்ற இனிப்புகளுடன் விருந்தும், பரிசுப் பொருட்கள் பரிமாறலுமாக உள்ளங்கள் பூரித்துப் பொலிவு பெறுகின்றன. நூற்றாண்டுகளாக இந்தக் கொண்டாட்டம், இந்த உற்சாகம் தொடர்ந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பேரார்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள். 

இந்த இனிய நாளில் எங்கும் மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கிப் பெருகுகிறது. சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது. அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுங்கள்....நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள்...ஸ்டீவன்சன். 

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும், நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர். நமது எண்ணங்களுக்கும் மன அலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 

 இதனை திருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே போய் இப்படி சொல்கிறார்.

 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல்.


நமக்கு துன்பம் செய்தவர்களை கூட, அவர்கள் வெட்கப்படும் படி நன்மை செய்வதாகும் என்கிறார். பின்னர் அவர்கள் நமக்கு செய்த தீமைகளையும், நாம் அவர்களுக்கு செய்த நன்மைகளையும் மறந்துவிட வேண்டும் என்கிறார்.

ஆம், நமது மனதினை சுத்தப்படுத்தி, மனதினை மிகவும் விசாலமாக்கும் விழாக்காலம் இது. வரும் புத்தாண்டு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பல்வேறு வெற்றிகளையும் வாரி வழங்கட்டும். 

இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



Monday, October 24, 2011

World Polio Day, see how you can help

On World Polio Day, 24 October, Rotarians around the globe show their support for ending the disease, which still strikes young children in Asia, Africa, and the Middle East.

ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்


       தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

       'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.


அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒற்றுமையாய் தீபத்திருநாளை கொண்டாடுவோம்.

Friday, October 21, 2011

RID 2980 EVENTS

தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

Saturday, October 1, 2011

நிம்மதி.. நிம்மதி..


இந்திய தொலைத் தொடர்பு  ஒழுங்கு முறை  ஆணையம்  (TRAI) அண்மையில் இந்தியாவில் எஸ்.எம்.எஸ் துறையில் புதிய விதிகளை வெளியிட்டது.

இந்த கட்டுப்பாடுகள் நுகர்வோருக்கு உத்தியோகப் பூர்வமற்ற வர்த்தக  SMS  அனுப்புவதை  தடுத்து வடிவமைக்கப் பட்டுள்ளன.

செப்டம்பர் 27 2011, முதல் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் சேவை வழங்கும்  நிறுவனமும் புதிய TRAINCPR (தேசிய  வாடிக்கையாளர்  விருப்பம்  பதிவு  NCPR)) வழிகாட்டுதல்கள்  படி நடந்து கொள்ள வேண்டும். புதிய  TRAI   வழிகாட்டுதல்கள் பற்றி மேலும் விவரங்களுக்கு  www.nccptrai.gov.in தளத்தினைப் பார்க்கவும்.

இணைய வழி SMS துறையில் முதன்மையாக விளங்கும் way2sms செப்டம்பர்  27 முதல்  TRAI  விதிமுறைகளை  பின்பற்றுகிறது.

  • இனி பதிவு செய்யப்பட்ட (DND) மொபைல் எண்களுக்கு இணைய வழி SMS வழங்க முடியாது. அந்த சமயத்தில் செய்தி அனுப்புபவர்களுக்கு இங்கு காண்பிக்கப்பட்டது போன்ற செய்தி கிடைக்கும்.





  •   இனி அனுப்புபவர் பகுதியில் TD- 677800 (677800 is the Unique number allotted by Telecom operator to way2sms) என்ற எண் மட்டும் இருக்கும். பின்னர் எட்டு எழுத்துக்களில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண் இடம் பெறும்.
  •     மேலும் TRAI புதிய விதிகளின் படிஒவ்வொரு நாளும்  இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை செய்திகள் அனுப்ப இயலாது. 





TRAI-ன் புதிய விதிகள் ஒரு வகையில் நிம்மதி அளித்தாலும் என் போன்றவர்களுக்கு சற்று சிரமம்தான். எப்பொழுதும் இணையத்தின் வழிதான் குறுஞ்செய்தி அனுப்புவது வழக்கம். பார்ப்போம் ஒரு கதவு மூடினால் கண்டிப்பாக இன்னொன்று திறக்கும்.



Tuesday, September 27, 2011

கூகுளின் வயது 13


இன்று செப்டம்பர் 27ல் கூகுள் தன் பன்னிரண்டாவது ஆண்டை முடித்து 13 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது.

இந்த இனிய நாளை அழகிய பிறந்த நாள் தீம் உடன் கொண்டாடுகிறது. எளிமையான கேக், கொஞ்சம் பலூன் இவற்றுடன் பிறந்த நாள் லோகோ அருமையாக உள்ளது.




முதல் பிறந்த நாள்.

1995 – லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.
1996 – பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது.
1997 – கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர்-ல்தான், முதல் பிறந்த நாள்.

லோகோ அனைத்தையும் காண:
http://www.google.co.in/logos/


Monday, September 19, 2011

கூகுள் தரும் புதிய வசதி


நீங்கள் இதுவரை கூகுள் மேகக் கணிணியில் உங்கள் கோப்புகளை சேமித்து வைத்து இருப்பீர்கள். மிகவும் வசதியாகவும், தேவைப்பட்ட இடத்தில் பார்க்கும் வசதியையும் அனுபவித்து இருப்பீர்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தும் இருப்பீர்கள். இப்பொழுது அதனை இன்னும் மேம்படுத்தி கோப்புறைகளையும் சேமிக்கவும் வழி செய்து இருக்கிறது.




மேல் உள்ள படத்தில் அந்த வசதியை நீங்கள் காணலாம்.

மேலும் தெரிந்துகொள்ள:

Monday, September 5, 2011

எழுத்தறிவித்தவன் இறைவன்


மாதா, பிதா, குரு, தெய்வம் –
ஆசிரியர்களை முன்றாம் இடத்தில் வைத்து தெய்வத்திற்கும் மேலாக மதிக்கிறோம். 

இன்று ஆசிரியர்கள் தினம்.
ஒவ்வொரு மாணவனும் தன்னை உருவாக்கிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்லும் நாள். ஆசிரியர்களும் மாணவர்கள் மனதில் இடம் பிடித்து அவர்கள் நாட்டினை மேம்படுத்தும் நல்ல குடிமகனாக உருவாக்கும் அளவிற்கு தம்மை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்று சிந்திக்கும் நல்ல நாள்.

என்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி, ஒவ்வொரு கட்டத்திலும் கை பிடித்து தூக்கி விட்டு இன்றைக்கும் வழி நடத்திக் கொண்டிருக்கம் எனது கிராம பள்ளிக்கூட ஆசிரியப் பெருமக்களுக்கு எப்படி நன்றி சொல்வது.
நானும் அவர்களைப்போல கற்றதை பிறருக்கு கற்பிப்பதுதான் அவர்களுக்கு சொல்லும் நன்றி என நினைக்கிறேன். 
இந்த இனிய நாளில் அவர்களின் வாழ்த்துக்களுக்காக 
தலை வணங்கி நிற்கிறேன்.


Sunday, August 7, 2011


நண்பர்கள் தினம்




பெ‌ற்றோ‌ர்க‌ள், மனை‌வியை‌விட நமது து‌க்க‌த்‌‌திலு‌ம், ச‌ந்தோஷ‌த்‌திலு‌ம் ப‌ங்கு கொ‌ள்வ‌தி‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் மு‌‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கினறன‌ர். தா‌யிடமு‌ம், மனை‌வி‌யிடமு‌ம் ஏ‌ன் த‌ந்தை‌யிட‌ம்கூட ஆலோசனை செ‌ய்ய முடியாத ‌சில ‌விஷய‌ங்களை ‌ந‌ண்ப‌ர்களுட‌ன் கல‌ந்துரையாடுவத‌ன் மூல‌ம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம். அ‌த்தகைய ‌சிற‌ப்பு ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ உ‌ண்டு. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது.

அதனைத்தான்
உடுக்கை இழந்தவன் கை போல...' என்றார் திருவள்ளுவர்.

ந‌ட்பு‌க்கு இ‌ல‌க்கண‌ம் வகு‌த்த குசேல‌ன்-க‌ண்ண‌ன், து‌ரியோதன‌ர்- க‌ர்ண‌ன் உ‌‌ள்‌ளி‌ட்ட ப‌ல‌ர் ‌பிற‌ந்த ந‌ம் ம‌‌ண்‌‌ணி‌ல் யாரும் எனக்கு நண்பர்கள் இல்லை என்று கூற முடியாது. நம் மனதில் உள்ள நட்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அருமையான நாள்தான் இன்று. மனதின் அடியில் புதைந்து கிடக்கும் நட்பை புதுப்பித்துக் கொள்ளவும், புதிய நட்புகளை அடையாளம் கண்டு ஆராதிக்கவும் ஏற்ற நாள், நண்பர்கள் தினம்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

ஆனால் நான் சொல்கிறேன்
வருடத்தில் ஒரு நாள் மட்டும் அல்ல
நண்பர்களோடு இருக்கும் ஒவ்வொரு நாளும்
நண்பர்கள் தினம்தான் !
வாருங்கள் நண்பர்களே தினம் தினம் கொண்டாடுவோம்.

இனிவரும் நண்பர்கள் தினம்

Year
Date
2011
August 7
2012
August 5
2013
August 4
2014
August 3
2015
August 2
2016
August 7
2017
August 6
2018
August 5
2019
August 4
2020
August 2

Saturday, July 23, 2011

மனித நேயம்




வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.

அவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்தியவர்.

அதுபோல் திருவள்ளுவர்
 
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
என்று அன்புணர்வின் உன்னதத்தை சித்தரிக்கிறார்.

உயிரோடு கூடிய உடம்பு அன்பு வழியில் இயங்குவதாகும். அவ்வன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பானது எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பாகும்.

மேலும், கனியன் பூங்குன்றனார்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகளாவிய அறைக்கூவலை விடுக்கிறார்.

மதங்கள் அனைத்தும் அன்பையே முதன்மைப் படுத்தி போதிக்கின்றன. அன்பே கடவுள் என்கின்றன. ஆனால் மனிதன் நாகரிகம் வளர வளர புற உலக வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னை மறந்தான். பொருளாதார போராட்டத்தில் மனித நேயம் பறந்து போயிற்று.

எதிலும் ஒரு எதிர்பார்ப்பு கொண்டு வாழ்கிறான். இதனால் பரிசுத்தமான அன்பைக் கூட பாசாங்கு போலவே நினைக்கத் தோன்றுகிறது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள் வாழ்ந்த நம் தேசத்தின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது.

மனித நேயத்துடன் செயல்படுபவர்கள் போல் செயல்பட்டு சிலர் மக்களை ஏமாற்றுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அண்டை வீட்டாரின் தொடர்புகள் சொல்லும் அளவுக்குக்கூட இல்லை. யாரோ வேற்றுக் கிரக மனிதனைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களை சுமையாகக் கருதுகின்றனர். பெரியோர்களை மதிக்கும் தன்மை அறவே இல்லை. மனித வாழ்க்கையின் பாதி நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி முன்னே கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு மனித நேயத்தை அழிக்கும் கிருமியாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலைக்குக் காரணம் பெரியோர்கள், வீட்டிலிருக்கும் மூத்தவர்களின் வழிகாட்டுதல் இல்லாமையே.

பழங்காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். பெரியோர்கள் தங்களின் அனுபவ உண்மைகளை ஆராய்ந்து சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நலம் பயப்பதாகவே இருந்து வந்தது. இதனால் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அனைவரிடமும் அனுசரித்து நட்பு பாராட்டி சிறந்த பண்புடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ குழந்தை பிறந்தவுடன் கிரச் (குழந்தைகள் காப்பகம்) சுக்கு அனுப்பிவிடுகின்றனர். அந்த குழந்தைகள் பெரியோர்களின் அன்பில் அரவணைப்பில் வாழவில்லை. பெரியோர்கள் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். அனால் அவர்களுடன் அன்பு பாராட்ட நேரமில்லாமல் இருக்கின்றனர்.

பக்கத்துவீட்டுக் காரர்கள், அண்டைவீட்டுக் காரர்களுடன் உறவு பாராட்ட வேண்டும். இன்றும் கிராமங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதைப் பார்த்திருக்கலாம். படித்த நகர மக்களிடையே மனித நேயம் வளரவேண்டும். குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை குறைக்க வேண்டும். இயற்கையின் அற்புதங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தால் மனித நேயத்துடன் இயற்கையையும் காக்கும் காவலர்களாக எதிர்கால சமுதாயம் விளங்கும் என்பது நிதர்சனமான உண்மை.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தத்துவக் கோட்பாட்டின்படி மக்கள் வாழ்ந்தால் மனித நேயம் தழைத்தோங்கும்.