Friday, January 14, 2011

போலியோ இல்லா உலகம்

.

ரோட்டரி இன்டர்நேஷனல் தனது நூறறாண்டான 2005 –ஆம் ஆண்டிற்குள் போலியோவை ஒழிப்பதென முடிவெடுத்திருந்தது. இதற்கு ரோட்டடரியுடன் உலக நல ஸ்தாபனம், யுனிசெஃப், அமெரிக்க நோய் கட்டுபாட்டு மையம், பில் கேட்ஸ் நிறுவனம், மற்றும் பல்வேறு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. உலகமெங்கும் போலியோ ஒழிப்பு முழுமையடைந்தாலும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் நைஜீரியாவில் மட்டும் இன்னும் முழுமையடையவில்லை. இந்த நாடுகளில் போலியோவை ஒழிக்க ரூ 825 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது ரோட்டரி கிளப். இதன் ஒரு பகுதியாக ரோட்டரி மாவட்டம் 2980 சார்பில் நடந்த மாவட்ட மாநாட்டில், நிதி திரட்டும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அரங்கில் நடந்தது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகை சினேகா. விழாவில் பேசிய சினேகா, "போலியோ ஒழிப்பு என்பது இன்றைக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். என்னுடைய அப்பாவும் ஒரு ரொட்டேரியன்தான். அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்ததை பெருமையாகக் கருதுகிறேன். போலியோ ஒழிப்பு என்ற நோக்கத்துக்கு ஒவ்வொருவரும் தம்மாலான தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும்..", என்றார்.  இதில் தானே முதல் நபராக ரூ 15000 கொடுத்து போலியோ ஒழிப்புக்கான நிதி திரட்டலைத் தொடங்கிவைத்தார் சினேகா.


நாடு முழுவதும் இளம்பிள்ளை வாத தடுப்பு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான முகாம் வரும் ஜனவரி 23-ம் தேதியும், பிப்ரவரி 27-ம் தேதியும் நடக்க இருக்கிறது. சிறு நோய்களான காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ கிருமிகள் பரவுவதை தடுத்து போலியோ நோய் இல்லை என்ற நிலையை இந்தியாவில் உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அப்பொழுது 5-வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க நாம் அனைவரும் ஒத்துழைப்பு தருவோம்.

போலியோ தடுப்பு சொட்டு மருந்து நாட்கள்: 23.01.2011, 27.02.2011

Thursday, January 13, 2011

பொங்கல் வாழ்த்துக்கள்

இனிய நண்பர்களே,


எல்லோரும் எப்பொழுதும் எல்லாமும் பெற்று இனிதே வாழ என் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Sunday, January 2, 2011

பயண அனுபவம்










விருத்தாசலத்திலிருந்த்து சேலத்திற்கு பாசஞ்சர் ரயில் ஆரம்பித்து வருடங்கள் பல ஆனாலும் நான் அதில் பயணம் செய்ததே இல்லை. அது நெய்வேலியில் புறப்படாமல் விருத்தாசலத்தில் புறப்படுவதுவது ஒரு காரணம். காலையில் புறப்படும் நேரத்திற்கு இங்கிருந்து செல்ல சரியான பஸ் இல்லை என்பது மற்றோர் காரணம். சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் பாசஞ்சர் ரயில்களின் தகவல்களை எங்கிருந்து பெறுவது, வழி இருந்தால் சொல்லுங்கள் என்றார். அப்பொழுதான் தேடியபோது இந்த அருமையான வலை கண்ணில் பட்டது. அதனை இங்கு காணலாம். அதில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் கொடுத்து சொடுக்கினால் ரயில்களின் பட்டியல் அத்தனையும் கிடைக்கும், பாசஞ்சர் உட்பட. அதுதானே நமக்கு வேண்டும்.

   
  பட்டியலில் தேவையான நம்பரில் சொடுக்கினால் புறப்படும் நேரம், பயண நேரம், எத்தனை இடங்களில் நின்று செல்லும் என்று அத்தனை தகவல்களும் கிடக்கிறது. மேப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதா?. அதற்கும் வழி இருக்கிறது. ரூட் மேப் சொடுக்கினால் பார்க்கலாம்.



 அது மட்டுமல்ல போகும் இடத்தில் மழை பெய்யுமா? அல்லது எத்தனை டிகிரி வெய்யில எல்லாம் தருகிறது. அப்பொழுதுதான் தெரிந்தது காலை ஆறு மணிக்குத்தான் சேலம் ரயில் என்று. பின்னர் ஒரு மார்கழி காலையில் பயணம் செய்ததது மிக ரம்மியமாக இருந்தது.
ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் பஸ்சில் பயணம் செய்பவர்களைப் பார்த்து டாடா சொல்லாத ரோட்டில் நிற்கும் குழ்ந்தைகள் ரயிலுக்கு டாடா சொல்வது ஏன் ?
Get info from this site: http://indiarailinfo.com/

Saturday, January 1, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம பதினாயிரம் நாட்டல்
பின்னருள தருமங்கள் யாவும் பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . .

மாகாகவி பாரதியார் சொன்னது போல இயலாத குழந்தைகளுக்கு
கல்வி கற்க உதவி புரிந்தால் நமது நாடு விரைவிலே வளமான நாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி தந்தால் ஒரு குடும்பமே கல்வி பெறும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.