Sunday, January 2, 2011

பயண அனுபவம்










விருத்தாசலத்திலிருந்த்து சேலத்திற்கு பாசஞ்சர் ரயில் ஆரம்பித்து வருடங்கள் பல ஆனாலும் நான் அதில் பயணம் செய்ததே இல்லை. அது நெய்வேலியில் புறப்படாமல் விருத்தாசலத்தில் புறப்படுவதுவது ஒரு காரணம். காலையில் புறப்படும் நேரத்திற்கு இங்கிருந்து செல்ல சரியான பஸ் இல்லை என்பது மற்றோர் காரணம். சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் பாசஞ்சர் ரயில்களின் தகவல்களை எங்கிருந்து பெறுவது, வழி இருந்தால் சொல்லுங்கள் என்றார். அப்பொழுதான் தேடியபோது இந்த அருமையான வலை கண்ணில் பட்டது. அதனை இங்கு காணலாம். அதில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் கொடுத்து சொடுக்கினால் ரயில்களின் பட்டியல் அத்தனையும் கிடைக்கும், பாசஞ்சர் உட்பட. அதுதானே நமக்கு வேண்டும்.

   
  பட்டியலில் தேவையான நம்பரில் சொடுக்கினால் புறப்படும் நேரம், பயண நேரம், எத்தனை இடங்களில் நின்று செல்லும் என்று அத்தனை தகவல்களும் கிடக்கிறது. மேப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதா?. அதற்கும் வழி இருக்கிறது. ரூட் மேப் சொடுக்கினால் பார்க்கலாம்.



 அது மட்டுமல்ல போகும் இடத்தில் மழை பெய்யுமா? அல்லது எத்தனை டிகிரி வெய்யில எல்லாம் தருகிறது. அப்பொழுதுதான் தெரிந்தது காலை ஆறு மணிக்குத்தான் சேலம் ரயில் என்று. பின்னர் ஒரு மார்கழி காலையில் பயணம் செய்ததது மிக ரம்மியமாக இருந்தது.
ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் பஸ்சில் பயணம் செய்பவர்களைப் பார்த்து டாடா சொல்லாத ரோட்டில் நிற்கும் குழ்ந்தைகள் ரயிலுக்கு டாடா சொல்வது ஏன் ?
Get info from this site: http://indiarailinfo.com/

1 comment:

  1. Journey Experience is Super. Very useful guide to Indian Railways

    ReplyDelete