Saturday, February 5, 2011

ஐந்தெழுத்து



v ஒரு ஐந்தெழுத்து வார்தை
  அந்த வார்த்தை எனும் 
  தண்டவாளத்திலேயே
  எல்லோரின் வாழ்க்கை 
  ரயிலும் ஓடிக கொண்டிருக்கிறது!

v அதனால்தான்
உலகம் விடிகிறது....
இயற்கை தன்னை
புதுப்பித்துக் கொள்கிறது!

v உணவைத் தேடி
எறும்புகள் ஊர்வலம்
போவது போல ..

v இந்த வார்த்தையை பின்பற்றி
மனிதகுலம் அடிக்கடி தன்னை
உயிர்ப்பித்துக் கொள்கிறது!

v நிகழ் காலத்தையும்,
எதிகாலத்தையும்
வலிமையோடு எதிர்கொள்ளவும்
இந்த வார்த்தையே பயன்படுகிறது!

v மரணத்திடம் மாட்டிக்கொண்டு
போராடுபவர்களுக்கும்
சோதனைகளால் வருந்த்துபவர்களுக்கும்
வேதனையால் துடிப்பவர்களுக்கும்
இந்த வார்த்தையே
வேத வாக்கு!

v அந்த வார்த்தைக்கு அழிவே இல்லை ...
அது அழிந்தால்
உலகமே இல்லை!

v அந்த வார்த்தை ..
நம்பிக்கை!
                                -  நன்றி தினமலர்

யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதர்களின் பலம் நம்பிக்கையிலே ..