Monday, March 7, 2011

ம்களிர் தினம்


அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.



பெண்களுக்கு வேண்டிய உரிமைகளில் பல இன்று நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், இவையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத காலத்திற்கு முன் சிந்தித்த தீர்க்க தரிசனமும், பெருமையும் பாரதியாரைச் சாரும். அவர் பெண் விடுதலை என்ற ஒரு அருமையான கட்டுரையில், சமநீதித் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒன்பது கட்டளைகளைப் பட்டியலிடுகிறார் இப்படி

1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2.
அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3.
விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
4.
சொத்தில் சம உரிமை தர வேண்டும்
5.
திருமணமின்றி வாழும் உரிமை வேண்டும்
6.
பிற ஆடவருடன் பழகும் சுதந்திரம் வேண்டும்
7.
உயர் கல்வி அனைத்துத் துறையிலும் தரப்பட வேண்டும்
8.
எவ்விதப் பணியிலும் சேரச் சட்டம் துணை நிற்க வேண்டும்
9.
அரசியல் உரிமை வேண்டும்

பெண் என்பவள் ஆணின் பாதி அல்லவா, அதனால்தான் பாரதி,
கண்க ளிரண்டினி லொன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடுங் காணீர்.

என்று பெண்மையைப் பேணி வளர்க்க வேண்டியதின் இன்றியமையாமையைக் குறிப்பிட்டார். பெண்மை உயர்ந்தால், சமுதாயமும் நாடும் உயரும் என்பதை மனதார ஏற்று, மதித்து வாழக் கற்றுக் கொள்வோம்!.


1 comment: