Sunday, April 10, 2011

தேர்தல் 2011






இந்தியாவில் ஜனநாயகத்திற்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் இல்லை, வாக்குரிமை என்பது நமது வளமான எதிர்காலத்தை தீர்மானிக்கும் துருப்பு சீட்டு, அதை நாம் விலைக்கு விற்க கூடாது, இந்த நாட்டுக்கு யார் நல்லது செய்வார், என்று யோசித்து ஆராய்ந்து வேட்பாளரை வெற்றி பெற செய்யும் சமுதாய கடமை எல்லா வாக்காளருக்கும் உண்டு,

ஏப்ரல் 13 ,2011 நமது மாநிலத்தின் (தமிழ்நாடு) எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாள்.
 
அந்த எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு நம் ஒவ்வொரூவரின் கையில் தான் உள்ளது. ஓட்டுரிமை என்பது தனிநபர் உரிமை இல்லை அது நம் ஜனநாயக கடமை. நாம் அனைவரும் அசதியும், வசதியும் பாராமல் நமது கடமையை உணர்ந்து நிச்சயம் வாக்களிக்கவேண்டும். தொகுதியை முன்னேற்ற உழைக்கும் தகுதியான ஒருவரை அடையாளம் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுங்கள்.


இந்த தேர்தல் பற்றிய அனைத்து விபரங்களையும் இணையதளத்தின் மூலம தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி: http://elections.tn.gov.in/