மருத்துவம் பயில எப்பொழுதுமே மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதுவும் இந்த ஆண்டு உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சதம் எடுத்தவர்களும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இருப்பினும் உங்களுக்கென்று கல்லூரியில் ஒரு இடம் உள்ளது.
அரசு கல்லூரியில் இடங்கள்:
SNO
|
NAME
|
TOTAL
|
1
|
M.M.C., CHENNAI
|
140
|
2
|
S.M.C., CHENNAI
|
127
|
3
|
M.M.C., MADURAI
|
132
|
4
|
T.M.C., THAN AVUR
|
127
|
5
|
K.M.C., CHENNAI
|
85
|
6
|
C.M.C., CHENGALPET
|
43
|
7
|
T.M.C., TIRUNELVELI
|
127
|
8
|
C.M.C., CQIMBATQRE
|
128
|
9
|
G.M.K.M.C., SALEM
|
64
|
10
|
K.A.P.V., TRICHY
|
85
|
11
|
T.M.C., THQQTHUKUDI
|
85
|
12
|
K.M.C., KANYAKUMARI
|
85
|
13
|
V.M.C., VELLQRE
|
85
|
14
|
T.M.C., THENI
|
85
|
15
|
D.M.C., DHARMAPURI
|
85
|
16
|
V.M.C., VILLUPURAM
|
85
|
17
|
T.M.C., THIRUVARUR
|
85
|
TOTAL
|
1,653
|
தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள 1,945 இடங்களில் அகில இந்திய அளவிலான ஒதுக்கீட்டில் 292 இடமும், மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் 1.653 இடங்களும் பகிர்ந்து கொள்ளப்படும். தனியார் சுய நிதி மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 1010 இடங்ககளில், மானேஜ்மென்ட்( நிர்வாக ரீதியானது) வகைக்கு 375 இடங்களும், மீதி 635 மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் பகிர்ந்து கொள்ளப்படும்
இந்த வருடம் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரியிலும் கிடைக்கும். விண்ணப்பம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கு இலவசம். மற்ற பிரிவு மாணவ-மாணவிகள் ரூ.500-க்கு செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம் சென்னை-10 என்ற முகவரியில் ஏதாவது அரசு உடைமையாக்கப்பட்ட வங்கியில் எடுக்கவேண்டும். பின்னர் அதை கொடுத்து விண்ணப்பம் பெறவேண்டும்.
கட்டண விலக்கு அளிக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகள் உண்மை நகல் என்று சான்றொப்பம் செய்யப்பட்ட சாதி சான்றுடன் பிளஸ்-2 மதிப்பெண் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சமர்ப்பித்து விண்ணப்பத்தை பெறலாம்.
விண்ணப்பம் ஜுன் 2-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அன்றுதான் (ஜுன் 2-ந்தேதி) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாளாகும். விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
பிளஸ்-2 மார்க்குகள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் ஜுன் 21-ந்தேதி வெளியிடப்படும்.
மருத்துவ கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நடைபெறும். கவுன்சிலிங் ஜுன் 30-ந்தேதி தொடங்குகிறது.
THE SECRETARY,
SELECTION COMMITTEE,
162, E.V.R. PERIYAR SALAI,
KILPAUK, CHENNAI – 600 010.
on or before 02 – 06 – 2011 by 5.00 p.m
For Further Information See the Web site: www.tnhealth.org