தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் (மே 9-ம் தேதி) மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் நிலவி வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பதால் கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் வாய்ப்பு உள்ளது. சில பாடங்களில் கூடுத்ல் மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும் என எண்ணுபவர்கள் நகல, மறு கூட்டல் , மறு மதிப்பீடு ஆகியவற்றுக்கு மே 11-ம் தேதி முதல் 16 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்:
1. முதன்மைக் கல்வி அலுவலகங்கள்
2. மாவட்ட கல்வி அலுவலகங்கள்
3. தேர்வுத் துறை மண்டல இயக்குனர் அலுவலகங்கள்
4. தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம்.
கட்டணம்:
நகல பெற: மொழிப்பாடங்கள் : ரூபாய் 550/-
(முதல் மற்றும் இரண்டாம் தாள் சேர்த்து)
இதர பாடங்கள்: ரூபாய் 275/-
Demand Draft: Director of Government Examinations, Chennai – 6
From any nationalized Banks.
DD should be Payable at Chennai.
மேலே குறிப்பிட ஏதாவது ஒரு அலுவலகத்தில் டிராப்ட் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்று சரியாக பூரத்தி செய்து அனுப்ப வேண்டும். மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் நகல்கள் நேரடியாக வீட்டிற்கே வந்துவிடும். நகல்களைப் பார்த்து, கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதினால் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மறு கூட்டளுக்கென தனியாக விண்ணப்பிக்க தேவை இல்லை.
மறு கூட்டல் கட்டணம்:
மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல்: ரூபாய் 305/- (ஒவ்வொரு பாடத்திற்கும்)
இதர பாடங்கள்: ரூபாய் 205/- (ஒவ்வொரு பாடத்திற்கும்)
மறு மதிப்பீடு:
ஒவ்வொரு பாடத்திற்கும்: ரூபாய் 505/-
(நகல பெற்ற மாணவர்கள் மட்டுமே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும்)
குறிப்பு: சரியான கட்டணத்திற்கு அலுவலக சுற்றறிக்கையைப் பார்க்கவும்
Students to get your results from the following websites:
http://www.collegesintamilnadu.com/results/Tamil-Nadu-Exam-Results-Index.asp
No comments:
Post a Comment