இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) அண்மையில் இந்தியாவில் எஸ்.எம்.எஸ் துறையில் புதிய விதிகளை வெளியிட்டது.
இந்த கட்டுப்பாடுகள் நுகர்வோருக்கு உத்தியோகப் பூர்வமற்ற வர்த்தக SMS அனுப்புவதை தடுத்து வடிவமைக்கப் பட்டுள்ளன.
செப்டம்பர் 27 2011, முதல் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் சேவை வழங்கும் நிறுவனமும் புதிய TRAINCPR (தேசிய வாடிக்கையாளர் விருப்பம் பதிவு NCPR)) வழிகாட்டுதல்கள் படி நடந்து கொள்ள வேண்டும். புதிய TRAI வழிகாட்டுதல்கள் பற்றி மேலும் விவரங்களுக்கு www.nccptrai.gov.in தளத்தினைப் பார்க்கவும்.
இணைய வழி SMS துறையில் முதன்மையாக விளங்கும் way2sms செப்டம்பர் 27 முதல் TRAI விதிமுறைகளை பின்பற்றுகிறது.
- இனி பதிவு செய்யப்பட்ட (DND) மொபைல் எண்களுக்கு இணைய வழி SMS வழங்க முடியாது. அந்த சமயத்தில் செய்தி அனுப்புபவர்களுக்கு இங்கு காண்பிக்கப்பட்டது போன்ற செய்தி கிடைக்கும்.
- இனி அனுப்புபவர் பகுதியில் TD- 677800 (677800 is the Unique number allotted by Telecom operator to way2sms) என்ற எண் மட்டும் இருக்கும். பின்னர் எட்டு எழுத்துக்களில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண் இடம் பெறும்.
- மேலும் TRAI புதிய விதிகளின் படி, ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை செய்திகள் அனுப்ப இயலாது.
TRAI-ன் புதிய விதிகள் ஒரு வகையில்
நிம்மதி அளித்தாலும் என் போன்றவர்களுக்கு சற்று சிரமம்தான். எப்பொழுதும் இணையத்தின்
வழிதான் குறுஞ்செய்தி அனுப்புவது வழக்கம். பார்ப்போம் ஒரு கதவு மூடினால்
கண்டிப்பாக இன்னொன்று திறக்கும்.
அட ஆமா சார்.. திடிர்னு... 9 - 9 ஸ்டாப் பண்ணிட்டாங்க... அது மட்டுமில்லாம ஃபிரின்னு சொன்ன இணைய வழி எஸ் எம் எஸ் அனுப்புனதுல பேலன்ஸ் எப்படி காலி ஆகுதுன்னும் தெரியல... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராஜேஷ், விரைவில் மாற்று வழி கிடக்கும்
ReplyDeleteவணக்கம் நணபரே
ReplyDeleteநல்ல செய்தி வாழ்த்துக்கள்
நன்றி மதன், சந்திப்போம்..
ReplyDelete