Sunday, November 11, 2012

தீபாவளி நல்வாழ்த்துகள்!





தீபாவளி பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும். தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், குறிப்பாக - பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான். 





கூடுமானவரை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றால், விபத்து அபாயம், அதீத சத்தம், புகை என்று பட்டாசு உண்டாக்கும் கண நேர சந்தோஷத்தைக் காட்டிலும் மோசமான விஷயங்களே அதிகம். அப்படி மீறி பட்டாசு வெடித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதிக அபாயம் இல்லாத பட்டாசு வகைகளைத் தேர்ந்தெடுங்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடியுங்கள்!

தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.



அனைவருக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான
ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்!

Sunday, August 19, 2012

இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்



பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இறைவனை நினைத்திருந்து நோன்பெனும் மாண்பைத் தழுவியிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஈதுல் ஃபித்ர் என்னும் திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடும் நன்னாள் இன்னாள்.

எந்தச் சுவையும் அருகில் இருந்தாலும் அவற்றை நாடாமல் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோன்பு மனித மனங்களில் புனிதம் பூக்கும் மாண்புடையதாகும். ஏழை எளியவர்க்கு வழங்கிட வேண்டிய ஏழை வரியை உவப்புடன் ஜக்காத் ஆக வழங்கி ஈந்துவக்கும் இன்பம் எய்தும் ஈதுல்' பெருநாள் இந்நாள்.



நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

இறைவனுக்காக  இந்த நோன்பு  இருக்க நேர் வழி வாழ பாதை காட்டும் இந்த புனித  மாதத்தின் முடிவில் ரம்ஜான் கொண்டாடும்  அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள் 


Monday, May 21, 2012

வெற்றி உங்கள் பக்கம்


மே 22-ல் தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்

 ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்கள் வழியாக பார்க்கலாம்.

·         http://tnresults.nic.in/
·         http://dge1.tn.nic.in
·         http://dge2.tn.nic.in
·         http://dge3.tn.nic.in 




அல்லது முடிவுகளை மொபைல் மூலமும் பெறலாம்.
உங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் கொடுத்து எஸ்.எம்.எஸ் வழியாக பதிவுசெய்து கொள்ளவும். முடிவுகள் உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.

உங்கள் செய்தி இதுபோல் இருக்க வேண்டும்: tnboard12 123456,01/04/1995
செய்தி அனுப்பவேண்டிய எண்:   +919282232585.
இங்கே 123456 என்பது ஆறு இலக்க உங்கள ப்ளஸ் 2 பதிவு எண், 01/04/1995 என்பது பிறந்த தேதி.

Sunday, May 20, 2012

உங்கள் கல்லுரியை தேர்வு செய்யுங்கள்


2011-ம் ஆண்டு பொறியியல் கட்-ஆப் மதிப்பெண்கள்:

வருகின்ற 22-ம் தேதி காலை 11 மணிக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முடிவுகள் எப்படி இருக்குமோ, மதிப்பெண்கள் எவ்வளவு கிடக்குமோ என்ற கவலை மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான “கட் – ஆப் மதிப்பெண் கூடுமா குறையுமா என்ற தவிப்பில் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.  

கடந்த ஆண்டு , "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்களை, அண்ணா பல்கலை, தனது இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது. கல்லூரி வாரியாக, பாடப்பிரிவுகள் வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்கள் அப்படியே தரப்பட்டுள்ளன.

மாவட்டத்தை தேர்வு செய்தால், அம்மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் தெரிய வரும், பின்னர் இந்த ஆண்டு சேர உள்ள கல்லூரியை தேர்வு செய்து, வகுப்பு விபரத்தை குறிப்பிட்டால், அனைத்து பாடங்களுக்கான "கட்-ஆப்' மதிப்பெண்கள் கிடைக்கும். இதனை வைத்துகொண்டு, இந்த ஆண்டு நிலவரம் எப்படியிருக்கும் என்பதை, ஓரளவுக்கு மாணவர்களும், பெற்றோரும் யூகிக்கலாம்.

இங்கே கிண்டி பொறியியல் கல்லூரியின் மதிப்பெண்களை எப்படி பெறுவது என்றும், அதன் விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

Minimum cut-off 2011 
1. UNIVERSITY DEPARTMENTS OF ANNA UNIVERSITY - CEG CAMPUS  
CHENNAI 
Community – BC

Branch Name
OC
BC
MinimumCut-off
Minimum Cut-off
AGRICULTURE AND IRRIGATION ENGG.(SS)
194.75
192.75
BIO MEDICAL ENGG(SS)
197.50
196.67
CIVIL ENGINEERING
199.00
198.75
COMPUTER SCIENCE AND ENGG.(SS)
199.25
199.00
COMPUTER SCIENCE AND ENGG.
199.75
199.50
ELECTRONICS AND COMM ENGG.
200.00
199.75
ELECTRICAL AND ELEC. ENGG.
199.50
199.00
ELECTRONICS & COMM ENGG(SS)
199.50
199.25
GEO-INFORMATICS
197.25
196.50
INDUSTRIAL ENGINEERING
197.75
197.25
INFORMATION TECHNOLOGY(SS)
198.50
198.25
MATERIALS SCIENCE AND ENGG.(SS)
197.00
196.50
MECHANICAL ENGINEERING
199.67
199.25
MINING ENGINEERING
197.00
196.50
MANUFACTURING ENGINEERING
198.50
198.00
PRINTING TECHNOLOGY
195.25
194.25
CIVIL ENGINEERING - TAMIL MEDIUM
180.00
171.75
MECHANICAL ENGINEERING - TAMIL MEDIUM
182.25
173.00


மேலும் தெரிந்துகொள்ள: http://tancet.annauniv.edu:8080/cutoff2011/cutoff2011.html


Thursday, May 17, 2012

மனிதாமான மிக்க மருத்துவர்



கால்நடை மருத்துவ படிப்பில் சேர மே m14-ம் தேதி (14-05.2012) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஜுன்   18-ம் தேதி (18-06-2012) கடைசி நாள்.
 தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு வருடந்தோறும் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. அதன்படி இந்த ஆண்டும் அங்கு கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 22-ம் தேதி (22-05-2012) வெளியிடப்படுகிறது. இருப்பினும் அதற்கு முன்னதாக மே m14-ம் தேதி முதல் கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்ப படிவங்கள் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி, தூத்துக்குடி மீன் வளக் கல்லூரி, மதுரை, கோவை, திருச்சி, ராஜபாளையம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களில் கிடைக்கும். விண்ணப்பங் கள் ஜுன் 15-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜுன் 18-ம் தேதி கடைசி நாள்.

மாணவர்சேர்க்கை பற்றிய இதர விவரங்கள் காண:            http://www.tanuvas.tn.nic.in/ugadmin.html

Wednesday, May 9, 2012

நீங்களும் மருத்துவராகலாம்

எம்.பி,பி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பங்கள்
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள்: 06.06.2012


மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ்,.பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் 15-.௦05.2012 ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் எம்.பி.பி.எஸ்.-பி.டிஎஸ். (பல் மருத்துவம்) ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் விநியோகிக்கப்படும். வரும் 30-05.2012-ம் தேதி மாலை 3 மணி வரை பெற்றுக்கொள்ளலாம், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசித்தேதி ஜூன் 2-ம் தேதி எனவும் , ஜூன் 20-ம் தேதி தர வரிசை மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், ஜூலை 2-ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எங்கு கிடைக்கும்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். விண்ணப்பம் விநியோகிக்கப்படும் 

எத்தனை இடங்கள்: 

இந்த ஆண்டு 200 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல் படும்.

தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு:



Saturday, May 5, 2012

பொறியியல் விண்ணப்பங்கள்


பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள்
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள்: 06.06.2012



தமிழ்நாட்டில் பொறியியல் விண்ணப்பங்கள் மே 11 முதல் விற்பனை செய்யப்படும். விண்ணப்ப விற்பனை மே 11-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாள்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படாது.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்:
தமிழகம் முழுவதும் 58 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், பிற ஐந்து இடங்களில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 58 இடங்களில் விண்ணப்பன்க்களை பெறலாம்.

விண்ணப்பங்களைத் நேரில் பெற:
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 58 மையங்களில் மாணவர்கள் நேரில் சென்று ரூ.500-ஐ பணமாகவோ, வரைவோலையாகவோ செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, அருந்ததியின மாணவர்கள் தங்களது ஜாதிச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பித்து ரூ.250-க்கு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களைத் தபாலில் பெறலாம்:
விண்ணப்பங்களைத் தபாலில் பெற விரும்பும் மாணவர்கள், செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தைக் கோரும் கடிதத்துடன் ரூ.700-க்கான வரைவோலையை இணைக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, அருந்ததியின மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழுடன் ரூ.400-க்கான வரைவோலையை இணைத்தாலே போதுமானது.

வரைவோலை (Demand Draft):
அனைத்து வரைவோலைகளும் (டிமாண்ட் டிராப்ட்) செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை என்ற பெயருக்கு சென்னையில் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் மே 11 அல்லது அதற்குப் பிந்தைய தேதிகளில் மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும்.மாணவர்கள் இணைக்கும் டி.டி.யின் பின்புறத்தில் அவர்களது பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிட வேண்டும்

கடைசி தேதி:
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை, மே 31-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

எத்தனை இடங்கள்:
கடந்த ஆண்டு, 1.10 லட்சம் இடங்கள் பூர்த்தியான நிலையில், 40 ஆயிரம் இடங்கள் கடைசி வரை நிரம்பவில்லை. நடப்பாண்டில், 1.60 லட்சம் இடங்கள் வரை, எதிர்பார்க்கப்படுகிறது.


இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 044-22358265, 22358266, 22358267 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின்  http://www.annauniv.edu/  என்ற இணையதளத்தையும் பார்க்கலாம்.



Friday, April 13, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




இந்த இனிய “நந்தன தமிழ் புது வருடத்தில் அனைவருக்கும் நன்மைகள் பெருகட்டும். தீமைகள் விலகி ஓடட்டும்.

அனைவருக்கும் நல்ல உடல் நலத்தையும், பல்வேறு வளங்களையும் தந்து ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் வருடங்களும் அதற்கு இணையான ஆங்கில வருடங்களை தெரிந்து கொள்வோம்.

எண்
தமிழ் வருடங்கள்
ஆங்கிலத்தில்
ஆங்கில வருடம்
1
பிரபவ
Prabhava
1987-1988
2
விபவ
Vibhava
1988-1989
3
சுக்ல
Sukla
1989-1990
4
பிரமோதூத
Pramodhudha
1990-1991
5
பிரசோற்பத்தி
Prajorpati
1991-1992
6
ஆங்கீரச
Angirasa
1992-1993
7
ஸ்ரீமுக
Srimukha
1993-1994
8
பவ
Bhava
1994-1995
9
யுவ
Yuva
1995-1996
10
தாது
Dhatu
1996-1997
11
ஈஸ்வர
Esvara
1997-1998
12
வெகுதானிய
Vehudhaniya
1998-1999
13
பிரமாதி
Pramathi
1999-2000
14
விக்கிரம
Vikrama
2000-2001
15
விஷூ
Vishu
2001-2002
16
சித்திரபானு
Chitrabanu
2002-2003
17
சுபானு
Subanu
2003-2004
18
தாரண
Tarana
2004-2005
19
பார்த்திப
Parthiba
2005-2006
20
விய
Viya
2006-2007
21
சர்வசித்து
Sarvasithu
2007-2008
22
சர்வதாரி
Sarvadhari
2008-2009
23
விரோதி
Virodhi
2009-2010
24
விக்ருதி
Vikruthi
2010-2011
25
கர
Kara
2011-2012
26
நந்தன
Nandhana
2012-2013
27
விஜய
Vijaya
2013-2014
28
ஜய
Jaya
2014-2015
29
மன்மத
Manmatha
2015-2016
30
துன்முகி
Dhunmuki
2016-2017
31
ஹேவிளம்பி
Hevilambi
2017-2018
32
விளம்பி
Vilambi
2018-2019
33
விகாரி
Vikari
2019-2020
34
சார்வரி
Sarvari
2020-2021
35
பிலவ
Pilava
2021-2022
36
சுபகிருது
Subakrithu
2022-2023
37
சோபகிருது
Sobakrithu
2023-2024
38
குரோதி
Krodhi
2024-2025
39
விசுவாசுவ
Visuvaasuva
2025-2026
40
பரபாவ
Parabhaava
2026-2027
41
பிலவங்க
Plavanga
2027-2028
42
கீலக
Keelaka
2028-2029
43
சௌமிய
Saumya
2029-2030
44
சாதாரண
Sadharana
2030-2031
45
விரோதிகிருது
Virodhikrithu
2031-2032
46
பரிதாபி
Paridhaabi
2032-2033
47
பிரமாதீச
Pramaadhisa
2033-2034
48
ஆனந்த
Aanandha
2034-2035
49
ராட்சச
Rakshasa
2035-2036
50
நள
Nala
2036-2037
51
பிங்கள
Pingala
2037-2038
52
காளயுக்தி
Kalayukthi
2038-2039
53
சித்தார்த்தி
Siddharthi
2039-2040
54
ரௌத்திரி
Raudhri
2040-2041
55
துன்மதி
Thunmathi
2041-2042
56
துந்துபி
Dhundubhi
2042-2043
57
ருத்ரோத்காரி
Rudhrodhgaari
2043-2044
58
ரக்தாட்சி
Raktakshi
2044-2045
59
குரோதன
Krodhana
2045-2046
60
அட்சய
Akshaya
2046-2047