தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று
19.02.2012 (ஞாயிற்றுக்கிழமை)
போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் தவணையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 40,000-க்கும் மேற்பட்ட முகாம்களில், காலை 7 மணி முதல் மாலை 5 வரை போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.
பயணம் செய்வோருக்கு வசதியாக
முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில்
நிலையங்கள், விமான நிலையங்களில், நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க
சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே போலியோ சொட்டு
மருந்து போடப்பட்ட குழந்தைகளுக்கு இன்று (19.02.2012) சொட்டு மருந்து அளிக்கலாம் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2-வது தவணையாக வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும்
கைகோர்த்து செயல்படுவோம்.
புதுவை ரோட்டரி நண்பர்கள் வெளியிட்ட வீடியோவைப் பாருங்கள்:
Polio Awareness Film 2012 - Rotary club of Pondicherry, Aurocity - YouTube
No comments:
Post a Comment