கால்நடை மருத்துவ
படிப்பில் சேர மே m14-ம் தேதி (14-05.2012) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க ஜுன் 18-ம் தேதி (18-06-2012) கடைசி
நாள்.
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில்
சேர்வதற்கு வருடந்தோறும் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில்
கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. அதன்படி இந்த ஆண்டும் அங்கு கவுன்சிலிங் நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 22-ம் தேதி (22-05-2012) வெளியிடப்படுகிறது. இருப்பினும்
அதற்கு முன்னதாக மே m14-ம் தேதி முதல் கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான
விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்ப படிவங்கள்
சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, நாமக்கல் கால்நடை
மருத்துவக்கல்லூரி, தூத்துக்குடி மீன் வளக்
கல்லூரி, மதுரை, கோவை, திருச்சி, ராஜபாளையம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களில் கிடைக்கும். விண்ணப்பங் கள் ஜுன் 15-ம்
தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜுன் 18-ம் தேதி கடைசி நாள்.
No comments:
Post a Comment