பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து
இறைவனை நினைத்திருந்து நோன்பெனும் மாண்பைத் தழுவியிருந்த இஸ்லாமியப் பெருமக்கள்
ஈதுல் ஃபித்ர் என்னும் திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடும் நன்னாள் இன்னாள்.
எந்தச் சுவையும் அருகில்
இருந்தாலும் அவற்றை நாடாமல் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
நோன்பு மனித மனங்களில் புனிதம் பூக்கும் மாண்புடையதாகும். ஏழை எளியவர்க்கு வழங்கிட
வேண்டிய ஏழை வரியை உவப்புடன் ஜக்காத் ஆக வழங்கி ஈந்துவக்கும் இன்பம் எய்தும் ‘ஈதுல்' பெருநாள் இந்நாள்.
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு
துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது
நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள்
மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன்
நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட
மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?
இறைவனுக்காக இந்த நோன்பு இருக்க நேர் வழி வாழ பாதை காட்டும் இந்த புனித மாதத்தின் முடிவில் ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள்