Friday, November 1, 2013
Friday, October 4, 2013
சர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்!
உண்ணும்
விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால், அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை. சுவையாக
இருக்கிறது என்று அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரிக்காயை
வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம். அது சரியல்ல... பேரிக்காய் சாப்பிடுவதால்
உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர்
ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.
'நம் மக்கள் மறந்த கனிகளில், அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான். இது
நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது.
சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி
சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
ஆண்களுக்கு 60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட்
சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும்
அவதிப்படுவார்கள். இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப்
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைபாட்டைப் போக்கும்
மிகச்சிறந்த மருந்து பேரிக்காய். உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க
பேரிக்காய் மிகவும் சிறந்தது!
பேரிக்காய் தோலின்
துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது
இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள
ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும்
இது சிறந்த மருந்து. அதேபோல, செல்களின்
வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால்
கணுக்காலில் வீக்கம் ஏற்படும். இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல்
பேரிக்காய்க்கு உள்ளது.
குழந்தைகள் மற்றும்
பெண்களின் பருவ மாற்றங்களின்போது ஏற்படும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும், எலும்பு வீக்கம் அடையாமல் இருப்பதற்கும் இது நல்ல மருந்தாகும். இதிலுள்ள 'பாலி அன்சாச்சுரேட் அமிலம்’ செல்கள்
புதுப்பித்துக் கொள்வதற்கும், பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமி தாக்கதலில் இருந்தும் உடலுக்குப் பாதுகாப்பு
அளிக்கிறது.
பேரிக்காய்
மட்டுமல்ல, பேரிக்காய் மரத்தின் பட்டையும் கூட மருத்துவப்
பயன்மிக்கதுதான்! பேரிக்காய் மரப் பட்டை வலி நிவாரணியாகச் செயல்படுகிறது.
பட்டையைக் களிம்பாக்கி தசை பிடிப்பு, தசை வீக்கம் உள்ள
இடங்களில் தேய்த்தால் வீக்கம் குறையும்.
பேரிக்காயில் நிறைய
ஒட்டு ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து நாட்டுப்பழங்களை உண்பது
மிகவும் சிறந்தது. தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில்
பயன்படுத்தப்படுவதால், பழங்களை சாதாரணமாகக் தண்ணீரில் கழுவுவதற்குப்பதில், வெந்நீரில் கழுவி உண்பது மிகவும் அவசியம்' என்றார்
-நன்றி டாக்டர் விகடன்
Thursday, August 15, 2013
Independence Day India 2013
Independence Day India 2013 marked by a Google doodle
Independence Day India is the subject of Thursday's Google
doodle, on the occasion of India's 67th Independence Day. The doodle depicts a
tricolour ribbon, in the colours of the Indian flag - saffron, white and green.
15th August is celebrated as Independence Day across India to
mark the day that the country declared its independence from the British rule,
sixty-six years ago. India was
born as a sovereign nation on 15 August 1947, at the stroke of midnight, after
nearly two centuries of rule by the British.
The East India Company start ruling India after it defeated the
Nawab of Bengal and his French allies in the Battle of Plassey in 1757. The
company ruled India for hundred years, before it was forced to hand over the
reigns to the British Crown after the first revolt of Indian Independence in
1857.
The British Crown assumed direct control of India in 1858, and
passed a series of stricter, repressive laws that broke the proverbial back of
the local population. Unrest against the British Empire started rising, and the
arrival of Gandhi from South Africa gave the movement a much needed focal
point.
Gandhi became the symbol of the Independence movement, which was
built upon the ideas of non-violence, civil disobedience and non-cooperation.
The movement hit an upsurge during the late 1930s, and early 1940s, with India
frustrated at being dragged into the World War II, and pressing for a full
independence from the Empire, after earlier calls for partial self-rule.
Beaten down by the World War II, and the movement within India
that was now at its peak, the British Government finally decided to end the
British rule in India.
Sunday, May 19, 2013
பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு விண்ணப்பம்
பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு விண்ணப்பம்
2013-2014-ஆம் கல்வியாண்டில்
தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / அண்ணா பல்கலைக்கழக
கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பு (B.E. / B.Tech.) சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் கீழ்க்காணும் பொறியியல் கல்லூரி /
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 21.5.2013 முதல் 12.6.2013 முடிய கல்லூரி வேலை
நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
வழங்கப்படும்.
1. அரியலூர்: யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், அரியலூர் 621713
2. சென்னை: தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025
3. அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, புரசைவாக்கம், சென்னை 600012
4.கோயம்புத்தூர்: அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641013
5. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 641014
6. கடலூர்: முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணாமலை நகர் 608002
7. தருமபுரி: தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரி, பாலக்கோடு 636808. - உள்ளிட்ட 34 கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து கல்லூரியின் விவரங்கள் இங்கே காணலாம்.
விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் பிற
இனத்தவர் ரூ.300/-க்கான கேட்பு வரைவோலையினை (Demand Draft 19.5.2013-க்கு பின் பெறப்பட்ட வகையில்) "The Secretary, Second year
B.E. / B.Tech. Degree Admissions 2013, Alagappa Chettiar College of Engineering
and Technology, Karaikudi – 630 004" என்ற பெயரில் காரைக்குடியில் காசாக்கும் வகையில் (Payable at Karaikudi) எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விற்பனை மையங்களில்
பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் இனத்தவர்
(அருந்ததியர்), பட்டியல் / பழங்குடி (SCA/SC/ST) இனத்தவர், விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ள, சான்றிடப்பட்ட சாதிச் சான்றிதழின் நகலை (Attested Xerox copy of
SCA/SC/ST Community Certificate) ஒப்படைத்து விண்ணப்பத்தினை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் “The Secretary, Second year
B.E. / B.Tech. Degree Admissions 2013, ACCET, Karaikudi – 630 004” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 12.06.2013 மாலை 5:00 மணி.
நேரடி இரண்டாமாண்டு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான
கலந்தாய்வு, ஜூன் 2013 கடைசி வாரத்தில்
"அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடியில்" நடைபெறும்.
இதற்கான அழைப்புக் கடிதம் (Counselling call letter) உரியவர்கட்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று
தொழில் நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Sunday, March 3, 2013
+2 தேர்வுகள்
+2 தேர்வுகள் ஆரம்பித்துவிட்டது,
பெற்றோர்களே
உங்கள் பங்கு முக்கியம்.
குழந்தைகளின் பயத்தைப் போக்கணும்
கவலைப்படாதே, நாங்கள்
இருக்கிறோம். உலகம் பெரியது. படிப்பும், பரீட்சையும் அதில் ஒரு அங்கம். அதனால்
பதற்றம் அடையாதேன்னு ஆறுதல் வார்த்தைகள் சொல்லணும். குழந்தைகள் புரிஞ்சுக்குவாங்க.
அப்பவே பாதி வெற்றி கிடைச்ச மாதிரிதான்.
தொந்தரவு வேண்டாம்
தொந்தரவு ஏதுமின்றி
அமைதியான சூழ்நிலை இருந்தாலே போதும். அதுவே வெற்றிக்கு வழி. சிந்தனையும் செயலும்
ஒன்றாக இருப்பதற்கு தனிமை அவசியம். அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள்.
உடன் இருங்கள்
வேலை நிமித்தம்
வெளியூரில் இருந்தால் தவிர்த்து விட்டு , குழந்தையின் அருகாமையில் இருப்பது
அவசியம். பெற்றோர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதே பாதுகாப்பு உணர்வை
கொடுக்கும்.
எளிய உணவு
பொறித்த
உணவுகளைத்தவிர்த்து, எளிதில் செரிக்கும் சைவ உணவுகளை தரவேண்டும். நொறுக்கு தீனி
வேண்டாம். காய் கறிகள், பழங்கள் கொடுக்க வேண்டும். தாரளமாக நீர் அருந்துவது
நல்லது.
இரவில் நல்ல ஓய்வு எடுத்த பின்னர், அமைதியாக,
தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
வாழ்த்துக்கள்.
பிளஸ் 2
தேர்வு அட்டவணை
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15க்கு முடிகிறது.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15க்கு முடிகிறது.
மார்ச் 1 மொழித்தாள்
1
மார்ச் 4 மொழித்தாள் 2
மார்ச் 6 ஆங்கிலம் 1
மார்ச் 7 ஆங்கிலம் 2
மார்ச் 11 இயற்பியல், பொருளியல்
மார்ச் 14 கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு
மார்ச் 15 வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18 வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 21 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
மார்ச் 25 தொடர்பு ஆங்கிலம், இந்தியபண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழிப் பாடம் தட்டச்சு
மார்ச் 27 அரசியல்அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில்பாட எழுத்து தேர்வுகள்
மார்ச் 4 மொழித்தாள் 2
மார்ச் 6 ஆங்கிலம் 1
மார்ச் 7 ஆங்கிலம் 2
மார்ச் 11 இயற்பியல், பொருளியல்
மார்ச் 14 கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு
மார்ச் 15 வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18 வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 21 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
மார்ச் 25 தொடர்பு ஆங்கிலம், இந்தியபண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழிப் பாடம் தட்டச்சு
மார்ச் 27 அரசியல்அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில்பாட எழுத்து தேர்வுகள்
For
Details: http://dge.tn.gov.in/exam_schedule/HSC_2012.pdf
Monday, January 21, 2013
Saturday, January 19, 2013
Subscribe to:
Posts (Atom)