Sunday, May 19, 2013

பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு விண்ணப்பம்


பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு விண்ணப்பம்



2013-2014-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பு (B.E. / B.Tech.) சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் கீழ்க்காணும் பொறியியல் கல்லூரி / பாலிடெக்னிக் கல்லூரிகளில் 21.5.2013 முதல் 12.6.2013 முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.

1.
அரியலூர்: யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், அரியலூர் 621713

2.
சென்னை: தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025

3.
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, புரசைவாக்கம், சென்னை 600012

4.
கோயம்புத்தூர்: அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641013

5.
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 641014

6.
கடலூர்: முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணாமலை நகர் 608002

7.
தருமபுரி: தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரி, பாலக்கோடு 636808. - உள்ளிட்ட 34 கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து கல்லூரியின் விவரங்கள் இங்கே காணலாம்.

விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் பிற இனத்தவர் ரூ.300/-க்கான கேட்பு வரைவோலையினை (Demand Draft 19.5.2013-க்கு பின் பெறப்பட்ட வகையில்) "The Secretary, Second year B.E. / B.Tech. Degree Admissions 2013, Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi – 630 004" என்ற பெயரில் காரைக்குடியில் காசாக்கும் வகையில் (Payable at Karaikudi) எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), பட்டியல் / பழங்குடி (SCA/SC/ST) இனத்தவர், விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ள, சான்றிடப்பட்ட சாதிச் சான்றிதழின் நகலை (Attested Xerox copy of SCA/SC/ST Community Certificate) ஒப்படைத்து விண்ணப்பத்தினை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் “The Secretary, Second year B.E. / B.Tech. Degree Admissions 2013, ACCET, Karaikudi – 630 004” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 12.06.2013 மாலை 5:00 மணி.

நேரடி இரண்டாமாண்டு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் 2013 கடைசி வாரத்தில் "அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடியில்" நடைபெறும். 

இதற்கான அழைப்புக் கடிதம் (Counselling call letter) உரியவர்கட்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தொழில் நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment