தினத் தந்தி மே 04, 2018, 04:56 PM, சென்னை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீட் தேர்வு
எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்கள் மற்றும்
அவர்களுடன் உடன் செல்பவர்களுக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து டிக்கெட் வழங்கப்படும்.
ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டு வழங்கப்படும்.
அத்துடன் அவர்களுக்கு தலா ரூ.1000 உதவித் தொகை
வழங்கப்படும்.
மாணவர்கள் இந்த தொகையினை அவர்களது பள்ளித் தலைமை ஆசிரியர்
மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
நீட் தேர்வுக்கான நுழைவுத் தேர்வுச் சீட்டின் நகல்
மற்றும் பள்ளி அடையாள அட்டையின் அடிப்படையில் இந்த உதவியை பெற்றுக் கொள்ளலாம்
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, வெளி
மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ அம்மா மக்கள் முன்னேற்றக்
கழகம் முன்வந்துள்ளது.
கேரளாவில் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள்
உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பொற்காலராஜா
- 9363109303, ராகேஷ் - 9994211705
பாப்புலர் வி. முத்தையா - 8903455757/7373855503
அரசுப் பள்ளியில்
படித்த அல்லது ஏழை மாணவர்கள் இரண்டு பேர் வெளி மாநிலத்தில் சென்று நீட்
தேர்வெழுதத் தேவையான உதவிகளை செய்ய தான் தயாராக இருப்பதாக நடிகர்
பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஹால் டிக்கெட்டுடன்
டிவிட்டரில் தன்னை தொடர்பு கொண்டால் உடனடியாக ரயில் டிக்கெட்
முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வெழுத
வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் மாணவ, மாணவிகளில்
பல பேர் பொருளாதார மற்றும் பல காரணங்களால் வெளி மாநிலங்களுக்குச்
செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
ராஜஸ்தான் மற்றும்
கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் பலரும் இன்று
அல்லது நேற்றே ரயில் மூலமாகப் புறப்பட்டும் விட்டனர். இந்த நிலையில், செய்வதறியாது
இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் பல்வேறு தரப்பட்ட மக்களிடம் இருந்து
உதவிகள் குவிந்து வருகின்றன.
நீட் தேர்வு எழுத்தும் மாணவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் நடிகருமான
அருள்நிதி போக்குவரத்து, தாங்கும் இடம் மற்றும் உணவு என
மாணவர்களுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
விருப்பமுள்ளவர்கள் 9894777077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வு எழுதுவோருக்கு
உதவ ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் தமிழ் சங்கம் முன்வந்துள்ளது. போக்குவரத்து, உணவு, இருக்கும்
இடம் என அனைத்துக்கும் உதவுகிறது. ராஜஸ்தான்
செல்லும் மாணவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளவும் என வாசுகி பாஸ்கர் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
உதவி வேண்டுவோர் இவர்களை அணுகலாம்
முருகானந்தம் 9790783187
சவுந்தரவள்ளி 8696922117
பாரதி 7357023549 இந்த எண்ணிற்கு தொடர்புகொள்ள
கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வு எழுத
வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு விமானக்கட்டணம், தங்குமிடம்
ஏற்படுத்தி தரப்படும் என ஃபீனிக்ஸ் அகாடமி தெரிவித்துள்ளது. மாணவர்கள்
உதவிக்கு 7401717000, 7401717111, 7401717222 என்ற
தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஃபீனிக்ஸ் அகாடமி
கூறியுள்ளது.
https://www.dailythanthi.com/News/State/2018/05/04165642/Focusing-aids-for-students-in-Neet-Exam.vpf