இனி உங்களோடு கூகுள் அசிஸ்டென்ட் தமிழில் பேசும்.
2016-ம் ஆண்டு
கூகுளின் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில
ஆண்டுகளில் கூகுள் அசிஸ்டண்ட் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு
ஏற்ற வகையில் புதிய வசதிகளை வழங்கி வருகிறது. தற்சமயம் கூகுள் அசிஸ்டண்ட்
ஆன்ட்ராய்டு மட்டுமின்றி ஐஓஎஸ் இயங்குதளம் மற்றும் ஸ்மார்ட் டிவி, குளிர்சாதன
பெட்டி மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்ற IoT (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்)
சாதனங்களிலும் வழங்கப்படுகிறது.
கூகுள் அசிஸ்டன்ட் செட்டப் செய்வது எப்படி?
கூகுள் அசிஸ்டண்ட் சேவையை ஸ்மார்ட்போனில் செட்டப்
செய்வது மிகவும் எளிமையான காரியம். தான். ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில்
செட்டப் செய்ய:
- ஹோம் பட்டனை அழுத்தி பிடித்து கூகுள் அசிஸ்டண்ட்-ஐ ஆக்டிவேட் செய்யலாம்.
- விதிமுறைகளை ஏற்க கோரும் Agree பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- வாய்ஸ் கமான்ட்-ஐ ஆக்டிவேட் செய்து, Continue பட்டனை க்ளிக் செய்து Ok Google ஆப்ஷனை ஆன் செய்தால் அடுத்த திரை திறக்கும்.
- இனி உங்களது ஸ்மார்ட்போனில்
கூகுள் அசிஸ்டண்ட் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.
- மேலும் தமிழ் மொழியை உங்கள் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் மொபைலிலும் தேர்வு செய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment