இந்த ஆண்டின் கருப்பொருள்: #BreakTheBias
மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வழியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
வீட்டிற்கு உள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர்
என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த
மகளிர் தினமாகும்.
உலகெங்கிலும் உள்ள பாலின சமத்துவமின்மைக்கு எதிராக
நடவடிக்கை எடுப்பதற்கு ஆதரவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் இல்லாமல் உலகம்
இயங்காது என்பதை நாம் அனைவரும் அறிவோம்
அவர்களின் முயற்சியை பாராட்ட வேண்டிய நாள் இது!
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை பாலின பாகுபாடு இன்றி,
நாம் அனைவரும் சேர்ந்து உலகிற்கு உணர்த்த வேண்டும்.
நிலையான நாளைய உலகிற்கு இன்றைய தேவை பாலின சமத்துவம்.
No comments:
Post a Comment